
குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதாக அப்பகுதி பொது மக்களால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இத்தகவலின் அடிப்படையில் இன்று (20) காலை அங்கு மாநகர சபை ஊழியர்களுடன் சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் அப்பகுதி பொது மக்களுடன் இணைந்து இறைச்சி இருக்கும் இடத்தினை முற்றுகையிட்டனர்.
இதன் போது 520 கிலோ கிராம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளதுடன், இறைச்சிக்காக அறுப்பதற்கு வெட்ட தயாராக கட்டி வைத்திருந்த 3 மாடுகள், 2 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது.