"தகம்பாசல" எனப்படும் அறநெறி பாடசாலை கல்வியை பெறச் சென்ற ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக பாலிய வன்புணர்வுட்குட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக கருதப்பட்ட விஹாராதிபதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் எட்டு ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது.
கொலன்னாவ பகுதி விஹாரையொன்றின் விஹாராதிபதியாக இருக்கும் 47 வயதுடைய குறித்த விஹாராதிபதிக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2010ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி குறித்த சிறுமி அறநெறி பாடசாலைக்கு கல்வியை பெறச் சென்றிருந்த வேலை குறித்த விஹாராதிபதி அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.