இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6,420 நபர்கள் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான, 5 கிலோ ஹெராயின், 217 கிலோ கஞ்சா மற்றும் சுமார் 760 கிராம் ஐஸ் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
மேலும், 52 சந்தேக நபர்கள் துப்பாக்கிகள், வெடிமருந்துகள், கத்தி மற்றும் 3 வாள்களுடன் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது 06 சந்தேக நபர்கள் 367 கிராம் வெடிபொருட்கள், 23 டெட்டனேட்டர்கள் மற்றும் 07 கைக்குண்டுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
அதேபோன்று, 179,782 லீட்டர் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த 5,574 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தவிர, நீதிமன்ற உத்தரவுகளை மீறிய 5,110 நபர்களும், வேறு குற்றங்களைச் செய்த 8,750 நபர்களும் குறித்த இந்த 14 நாட்கள் காலப்பகுதியில் கைது செய்யப்பட்டனர்.