நீர்க்கட்டணங்களைச் செலுத்த நிவாரண காலம் வழங்கப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு நீர்க்கட்டண பட்டியல்கள் கிடைத்தால், முதலில் ஒரு கட்டணத்தை செலுத்தலாம்.
மற்ற கட்டணத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்தலாம் என்று சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்தார்.
இருப்பினும் நீர்வெட்டு அமுல் செய்யப்படமாட்டாது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை மின்சாரக் கட்டணம் பெப்ரவரி மாதம் வந்திருந்தால் அதே அளவான கட்டணத்தை இம்மாதம் செலுத்துமாறும் மின் கட்டணம் கூடுதலாக செலுத்தப்பட்டால் அது பின்னர் கழிக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.