
அதனடிப்படையுல் அரச ஊழியர்கள் தமது காரியாலத்திற்கு காலை 08:30 மணிக்கு சமூகம் செய்து மாலை 03-04 மணிக்கு தமதுவேலையினை நிறைவு செய்து கொள்ள முடியும் என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார்.
தனியார் நிறுவன பணிகள் காலை 10 மணிக்கு ஆரம்பிப்பதோடு, தனியார் ஊழியர்களுக்கு தமது வீடுகளிலிருந்து காலை 08;30 மணிக்குநிறுவனத்தினை நோக்கி புறப்பட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 04-05 மணிக்கு தமது வீடுகளுக்கு செல்லமுடியும் எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
வாக நெரிசலினை கட்டுப்படுத்துக் நோக்கிலேயே இவ்வாறான கால வரையறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும்தெரிவித்தார்.
பொது போக்குவரத்து மற்றும் அரச, தனியார், தொழிற்சாலை காவல் ஊழியர்களர்களுக்கு இக்கட்டுப்பாடு இல்லை எனவும் பொலிஸ்மாஅதிபர் தெரிவித்தார்.
தனியார் வாகனங்களில் பணிகளுக்கு செல்லும் நபர்கள் ஊர்ஜிதப்படுத்தி வேலைகளுக்கு செல்ல முடியும் எனவும், அவ்வாறின்றிமேல்மாகாணத்திற்கு வாகனத்தினை அனுமதியின்றி வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும்தெரிவித்தார்.
வேலை செய்யும் நிறுவனங்களுக்கு கூலி வண்டி மற்றும் முச்சக்கர வண்டிகளில் செல்பவர்கள் தனிமைபடுத்தல் சட்டங்களை முறையாகபேண வேண்டும்.
முச்சக்கர வண்டியில் செல்லக்கூடிய அதி கூடிய எண்ணிக்கை 02 நபர்கள் எனவும், மோட்டார் வாகனங்களில் செல்லக்கூடிய அதிகூடிய எண்ணிக்கை 03 நபர்கள் எனவும் தெரிவித்தார்.
நாளை முதல் பணிகள் ஆரம்பிக்கப்படும் போது குறித்த பணியார்கள் தாம் பணி புரியும் நிறுவனத்தினால் வழங்கப்படும் அடையாளஅட்டை அல்லது ஆவணம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லை எனின் தேசிய அடையாள அட்டையில்அவர்களின் தொழில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் பொலிஸாரினால் சோதனை செய்யப்படும் பொழுது அவர்கள் மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் ஏதாவதொன்றினை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். மேலும் ஆவணங்கள் இல்லையெனில் வாட்சப், வைபர் மூலமாகவும் பொலிஸ்அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் இல்லாதபட்சத்தில் வேலைக்கு செல்லும் இடம் மற்றும் தினம் குறிப்பிட்டு குறுந்தகவல் (SMS) மூலமாகவும் சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அத்தியவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்த வேண்டாம் எனவும், இக்கடிதம் நாளைமுதல் வேலைகளுக்கு செல்லும் அனைவரிடத்திலும் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாவட்டங்களுக்கிடையில் செல்கையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களினால் தன்னை வேலைக்கு அழைத்து வழங்கப்பட்டிருக்கும்கடிதம், நிறுவன அடையாள அட்டை பொலிஸாருக்கு சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.