
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுவதை தொடர்ந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்க வேண்டிய பல சுகாதார நடைமுறைகள் உள்ளன.
நீங்கள் பஸ்களில் அல்லது ரயில்களில் அலுவலகங்களுக்கு வருகை தருவீர்களேயானால் கட்டாயம் சமூக இடைவெளியை பேண வேண்டும்;.
அதேபோல் ஒரே பக்கம் பார்த்தவாறு பயணிக்க வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
முச்சக்கர வண்டிகளில் ஓட்டுனர் உள்ளிட்ட இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்.
பிரத்தியேக வாகனங்களில் வருகைத்தருவோர் கட்டாயம் காரியாளய அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டைகளை கொண்டுவருவது அவசியம்.
காரியாலயங்களுக்குள் நுழைய முன்னர் கைகளை நன்றாக கழுவி கிருமி தொற்று நீக்கம் செய்வதோடு உடலின் வெப்பநிலையை கணக்கிடுவதும் அவசியம்.
மின்தூக்கிகளில் பயணிக்கும் போது மிக அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் என்பதோடு அவற்றில் ஒருவருடைய முகத்தை ஒருவர் பார்க்காமல் பயணிக்க வேண்டியது கட்டாயமாகும்.
உணவு உண்ணும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம் என்பதோடு முடிந்தளவு தனித்தனியாக உணவு உட்கொள்வதே சிறந்தது.
வேலை முடிந்து வீடு செல்லும் போது மீண்டும் கைகளை நன்றாக கழுவி கிருமி தொற்று நீக்கம் செய்வதோடு கிருமி ஒழிப்பு கூடாரத்துக்குள் சென்று அணிந்து சென்ற ஆடைகளையும், உடலையும் கிருமி தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.
