கொறோனா தொற்றுக்கு ஆளாகி பலியான அனைவரையும் எரிப்பது அரசியல் தீர்மானம் அல்ல, மாறாக அது மருத்துவ ரீதியான தீர்மானமே! என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
நேற்றைய (07) தினம் சமகி ஜனபல வேகய கட்சி முக்கியஸ்தர்கள் அவரை சந்தித்து கலந்துரையாடிய போது அங்கு மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படாமை தொடர்பில் அவரிடம் முன்னாள் எம். பி முஜிபுர் ரகுமான் அவரிடம் வினவிய போது அதற்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலக சுகாதார ஸ்தாபனம் தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் அனுமதி அளித்துள்ள சூழலில் ஏன் இலங்கையில் அதற்கு அனுமதி வழங்க முடியாது, நீங்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் என நாம் அறிகிறோம், இந்த பின்னனியில் ஏன் இதற்கு அனுமதி அளிக்கவில்லை? என முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பிய அதேவேளை எரிப்பது அரசியல் தீர்மானமா? அல்லது மருத்துவ ரீதியான தீர்மானமா? எனவும் வினவினார்.
எரிக்க மட்டுமே முடியும் என்பது அரசியல் தீர்மானம் அல்ல! அது மருத்துவ ரீதியான தீர்மானம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க குறிப்பிட்டிருந்தார்.