
இவ் விபரங்களை உள்ளடக்கி குடிவரவு – குடியகழ்வு திணைக்களத்தினால் விசேட அட்டவணையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளை மறுதினம் (11) திங்கட்கிழமை முதல் காலை 9 மணிக்கு குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் அன்றாட நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தில் சேவையைப் பெற்றுக் கொள்ள வருகை தருபவர்கள் முன்னதாகவே திகதியொன்றையும் நேரமொன்றையும் ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு உரிய நபர்கள் வருகை தராத பட்சத்தில் அந்த நேரம் இரத்தாகும் என்பதோடு, அவ்வாறானவர்கள் மீண்டும் திகதி மற்றும் நேரம் என்பவற்றை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திகதி , நேரம் ஒதுக்கப்படும் போது வழங்கப்படுகின்ற அடையாள அட்டை இலக்கத்தை அல்லது பற்றுச்சீட்டை சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் போது எடுத்து வர வேண்டும் என்பதோடு, அலுவலகத்திற்கு வரும் போது அவற்றை பாதுகாப்பு பிரிவினரிடம் கையளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.