எதிர்வரும் திங்கட்கிழமை (11) மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது என கலால் துறை அறிவித்துள்ளது.
நாட்டில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட முந்தைய சந்தர்ப்பங்களில் மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும், சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாது, மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் கூடியிருந்த சம்பவங்கள் பதிவாகின.
இதனையடுத்து மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.
எனினும், எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்களும் திறக்கப்படும் என்ற வதந்திகள் சமூக ஊடகங்கள் பரப்பப்படுகின்றன.
இந்நிலையிலேயே, மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று கலால் துறை தெரிவித்துள்ளது.