
கொழும்பில், இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
தற்போதுள்ள சூழலில் அரச ஊழியர்கள் மத்தியில் எதிர்காலத்தில் தமக்கான மாதாந்த சம்பளம் கிடைக்கப் பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரச அதிகாரிகளுக்கு எவ்விதத் தடையும் இன்றி நிச்சயமாக ஊழியம் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம். காரணம் இந்த அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரச ஊழியர்களின் வாக்குகள் பெறும் பங்கு வகித்துள்ளன. அரச ஊழியர்களின் நம்பிக்கையை இழக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
முன்னர் காணப்பட்டதை விடவும் அரச ஊழியர்களுக்கு அதிகமான சலுகைகளை வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது. எனினும் எமக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. எனவே அதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெற்ற அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுக்கின்றோம்.
அனைவரதும் தொழில் வாய்ப்புக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எனவே தேர்தலை நடத்துவதற்கு காட்டும் ஆர்வத்தை நிறுத்தி, அதற்கு செலவிடுவதற்கு தீர்மானித்துள்ள நிதியினை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக செலவிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். தேர்தலுக்கான நிதியை அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக ஒதுக்குமாறு கோருகின்றோம்.
அரச துறை வீழ்ச்சியடையும் என்று சில மாதங்களுக்கு முன்னரே கூறப்பட்டது. அரச துறையை வீழ்ச்சியடையச் செய்யும் வகையில் சம்பளத்தை வழங்காமல் இருப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோருகின்றோம் என்றார்.