
தேர்தலினை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடாத்தவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் நிலைமையினை கருத்திற்கொண்டுதேர்தலினை அந்நாளில் நடாத்த முடியாமற்போகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதலாம் வாரத்தில் பாராளுமன்ற தேர்தலினை நடாத்தவே தேர்தல்கள்ஆணையம் கவனம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 20 தேர்தலினை நடாத்த எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்துள்ள நிலையிலே இவ்வறிக்கைவெளியாகியுள்ளது. பாராளுமன்றத்தினை கலைத்ததன் பின்னர் ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் கொரோனா வைரஸின் பரவல் காரணமாக பாராளுமன்ற தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தேர்தல்கள்ஆணையம் தீர்மானம் எடுத்தது.