
கொறோனா பரவிவரும் இக்கால கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் 5000 ரூபா வெகுமான வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம், குறிப்பிட்ட சில குழுவினருக்கு மாத்திரமே வழங்கப்பட்டு வந்த இந்த தொகை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுதலுக்கு இணங்க இம்மாதம் ஒய்வூதியம் பெறும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக வேண்டி மேலதிகமாக 831 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவை 162,000 விவசாயிகள் மற்றும் 4,907 மீனவர்களுக்கும் பகிர்ந்தலிக்க ஏட்பாடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய காப்பீட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி இந்த கொடுப்பனவு குறித்த பகுதிகளின் கிராம சேவகர் அலுவகத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ள முடியும்.