
குறித்த 8 பேரில் இருவர் டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் என்றும் மற்றைய 6 பேர் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 855 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி இதுவரை 525 பேர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
116 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் இதுவரை இலங்கையில் 332 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளனர்.