
ஏற்கனவே கடந்த மாதம் அத்தியாவசியமான மருந்துப்பொருட்கள் மற்றும் கையுறைகள் என்பன மூன்று பகுதிகளாக இந்திய அரசாங்கத்தினால் இலங்கையிடம் கையளிக்கப்பட்டன.
இந்த உதவிப்பொருட்களுடனான விமானத்தில் வருகைதந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பங்லே, இலங்கை மக்களுக்கு வெசாக்தின வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன்,இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒருமைப்பாடு என்பன குறித்தும் சுட்டிக்காட்டினார்.