
குடிவரவு மற்றும் குடியகல்வு விதிகளை மீறியமைக்காக வெளிநாட்டவர் ஒருவரை கல்கிஸ்ஸை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நைஜீரியாவை சேர்ந்த 30 வயதுடைய நபரே ரத்மலான காமினி மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்லுபடியாகும் வீசாவினை வைத்திராத காரணத்தினாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.
கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் இவரை தடுத்து வைத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.