
இந்தியாவிற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று முதல் மூன்று போட்டியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா (95) மற்றும் தவான் (143) ஆகியோரின் பெரியதொரு பங்களிப்பில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 358 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணி, 47.5 ஓவர் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்த நிலையில் 359 ஓட்டங்களை பெற்று, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
இந்த வெற்றியினை அடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என ஆஸ்திரேலியா சமப்படுத்தியது.
இரு அணிகளும் மோதும் கடைசி ஒருநாள் போட்டி எதிர்வரும் 13ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.