ஏறாவூரில் சம்பவம் - சீட்டுக்காசு கொடுக்க பணம் இல்லாததால் இளம் தாய் தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஏறாவூரில் சம்பவம் - சீட்டுக்காசு கொடுக்க பணம் இல்லாததால் இளம் தாய் தற்கொலை!

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மாவடிவேம்பில் சம்பவம்.

மேசன் தொழில் செய்துவரும் முரளீதரன் என்ற இளைஞன்,
தனது 17 ஆவது வயதிலும், ஜானு என்ற யுவதி தனது ஆவது 15 வயதிலும் திருமணம் முடித்து தற்போது மூன்று வயதுடைய பெண் குழந்தையொன்றுக்கு பெற்றோராகிய நிலையில்,

குடும்பச்சுமைகளை எவ்வாறு சமாளிப்பதென்றே தெரியாத பருவத்தில், சுமைகளை தலையில் தூக்கி வைத்ததால் ஏற்பட்ட வினையே தற்கொலை.
கணவனின் வருமானத்துக்கேற்ப செலவினை வகுக்க தெரியாத பருவத்தில், ஆடைக் கொள்வனவு முதல் இன்னோரன்ன தேவைகளை தவணை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட மனைவி ஜானு, மாதாந்தம் 2000 என சீட்டுக்காசி கட்டுவதற்கும் சேர்ந்ததால், நாளடைவில் இவற்றுக்கு பணம் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட தற்கொலைக்கு சென்றிருக்கிறார் என கணவர் முரளிதரன் தெரிவித்தார்.
இன்று (10) காலை 10 மணியளவில் மணிவாசகர் வீதி, மாவடிவேம்பு -02,ஐ சேர்ந்த, சிவானந்தம் ஜானு (19) என்ற இளம் தாயே இவ்வாறு தனது வீட்டின் படுக்கையறை வளையில் துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்தவராவார்.

-பிர்டௌஸ் அஸ்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.