
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் திருத்தப்பட்ட எரிபொருள் விலை இன்று அறிவிக்கப்படமாட்டாது என நிதி அமைச்சு தெரிவித்தது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிற்காக நாளை ஒன்று கூட உள்ளதாக எரிபொருள் நிரணயிப்பு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் எரிபொருள் விலையிடல் சூத்திரம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது கொண்டிருந்தது.
பெப்ரவரி மாதத்தில் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டரொன்றின் விலை ரூ.6 இனாலும், 95 பெற்றோல் லீட்டரொன்றின் விலை ரூ .5 இனாலும், ஒட்டோ டீசல் லீட்டரொன்றிற்கு ரூ .4 இனாலும், சூப்பர் டீசல் லிட்டரொன்றிற்கு ரூ .8 ஆகவும் நிதி அமைச்சினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து தற்பொழுது வரை எரிபொருள் விலை நான்கு முறைகள் அதிகரித்ததோடு, ஐந்து முறைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்தது.