
நாட்டினை கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும், தான் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நேற்று (09) ஹன்காமா நிறுவன திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.
71 ஆண்டுகளாக பல்வேறு அரசாங்கங்கள் இருந்த போதிலும் எந்தவொரு பலனும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது இலங்கை பிரஜை ஒருவரின் கடன் ரூ. 417, 175 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சரின் கருத்தாகும்.
இலங்கையானது ஊழல் நிறைந்த நாடாக மாறிவருவதாகவும், சர்வதேச வங்கிக் கடன் வீக்கமடைந்த நாடாகவும் அதி வேகமாக பின்னடைந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையிலிருந்து நாட்டை எந்தவொரு அரசியல் ஆதாயமும் இல்லாமல் காப்பாற்ற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.