
கென்யா நைரோபி நகரினை நோக்கி புறப்ப்ட்ட எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் 149 பயணிகள் மற்றும் 8 விமான சேவை பணியாளர்களுடன் இன்று அதிகாலை (10) விபத்துக்குள்ளானது.
"இது மு. ப. 8.44 மணிக்கு நடந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று பெயரை வெளிப்படுத்த மறுத்த ஊடகவிய பேச்சாளர் தெரிவித்தார்.
எதியோப்பிய பிரதமரின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பிய தலை நகரிலிருந்து வழமை போல் நைரோபி நகரத்தை நோக்கி புறப்பட்ட போயிங் 737 ரக விமானமே மேற்கூறப்பட்ட விபத்துக்குள்ளாகியுள்ளது.