
கட்டுநாயக்க விமான நிலைய குடியேற்ற முனைய எக்ஸ்ரே ஸ்கேன் (x-ray scan) செய்யும் பொழுதே தனது பொதியினுள் மறைத்து வைத்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
சந்தேக நபர் வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் தனது தாயாரை சந்தித்துவிட்டு நாடு திரும்புகையிலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட ஆயுதம் போரா-12 (Bora-12) துப்பாக்கி எனவும், சந்தேக நபரின் தந்தையாருக்கு சொந்தமானது எனவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்தது.
மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்வதற்காக கட்டுநாயக்க காவல் நிலையத்திற்கு குறித்த துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.