
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் -சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம் அலியார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த சமையல் உபகரணங்கள் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரினால் கையளிப்பு செய்யப்பட்டது.
ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்தை பொறுத்த வரை இராஜாங்க அமைச்சர் அவர்களால் பல்வேறு பங்களிப்புகள் செய்யப்பட்டிருக்கிறது, குறிப்பாக கணணி இயந்திரம், ஒலி பெருக்கி சாதனங்கள், கற்றல் உபகரணங்கள் , சீருடைகள் என பல்வேறு உதவிகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சமையல் சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் இந்த வருடமும் புதிதாக அமையப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் பிரிவிற்கான தனியான பாதையை அமைப்பதற்காக ரூபாய் 2மில்லியனை ஒதுக்கீடு செய்வதாகவும் , ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கான தனியான சமையலறை கட்டட தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளை தற்போது தான் முன்னெடுத்திருப்பதாகவும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் இங்கு தெரிவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் நாகமணி கதிரவேல், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ரியாழ் மற்றும் அமைச்சரின் இணைப்பு செயலாளர்களான முன்னாள் தவிசாளர் தஸ்லீம் , தபாலதிபர் நஸீர் , முன்னாள் அதிபர் சயீட் மற்றும் பராமரிப்பு நிலைய நிருவாகிகள் , மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


