மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோத வடிசாராயம் காய்ச்சும் நிலையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (10) கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவில் உள்ள முனைக்காடு மேற்கு ஆற்றங்கரைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணாக் காட்டுப் பகுதியிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
வவுனதீவு விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் வஹாப் தலைமையில் சுற்றி வழைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட போது 1,260,000 மில்லி லீற்றர் வடி சாராயம் வடிப்பதற்கு பயன்படுத்தப் படும் கோடா(Goda), மற்றும் 10,000 மில்லி லீற்றர் வடி சாராயம், வடிசாரயம் வடிப்பதற்கு பயன் படுத்தப் பொருட்கள் போன்றன கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது வடிசாராயம் வடித்துக் கொண்டிருந்த நான்கு நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார் ஏனய மூவரும் தப்பி ஓடி விட்டனர்.தப்பி ஓடியவர்களை கொக்கட்டிச்சோலை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் போது வடிசாராயம் வடித்துக் கொண்டிருந்த நான்கு நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார் ஏனய மூவரும் தப்பி ஓடி விட்டனர்.தப்பி ஓடியவர்களை கொக்கட்டிச்சோலை பொலிஸார் தேடி வருகின்றனர்.

-IP அப்துல் வஹாப்