
2018 ஆம் ஆண்டில் மட்டும் குடிபோதையில் வாகனம் செலுத்திய 105,094 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களாகும். அதனடிப்படையில் 65819 மோட்டர் சைக்கிள் ஓட்டுனர்கள் குடிப்போதையில் செலுத்தியமைக்காக 2018 இல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இன்று மேல் மாகாணத்தில் மேற்கொண்ட பரிசோதனையின் போது 222 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலின் உத்தரவின் கீழ் இந்த நடவடிக்கை இன்று நல்லிரவு முதல் அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
கொழும்பிலிருந்து வெளியேறுகையிலேயே அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகவியலாளர் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.