
கூட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இந்தப் புத்தக வெளியீடு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வெளியிடப்பட்ட புத்தகத்தின் முதல் பிரதி கையளிக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் பொதுப்பணத்தை கொள்ளையடித்த விதம் மற்றும் கொள்ளையடித்த அரசியல்வாதிகள் தொடர்பான விடையங்கள் இதில் அடங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டது.
மேலும் கடந்த இரண்டரை வருடங்களாக தற்போதைய அரசாங்கத்தின் போலீஸ் மற்றும் குற்றப்புலனாய்வு அலுவலகத்திற்கு கிடைத்த புகார்களும் இந்த புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தகம் வெளியிடுவதன் முக்கிய நோக்கம் சம்பந்தப்பட்டவர்களை சட்டரீதியாக விசாரிப்பதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதுமாகும் என எம்.பி. மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.